12 ஆம் வகுப்பு, தமிழ்,இயல் 1, இளந்தமிழே, சிற்பி பாலசுப்பிரமணியம்,கூடுதல் வினாக்கள்,+2 தமிழ்,12th தமிழ்,12th Tamil,+2 Tamil,Eyal 1, additional questions,2,4,6 mark question,
12 வகுப்பு
தமிழ்
இயல் 1
இளந்தமிழே
சிற்பி பாலசுப்ரமணியம்
கூடுதல் வினாக்கள்
எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
கார்மல் மேனிலைப் பள்ளி
நாகர்கோவில் - 4
9843448095
குறுவினா
1. தமிழ் எத்தகைய வலிமை வாய்ந்தது? (PTA -3)
தமிழர்களைச் சூழ்ந்திருக்கும் அடிமைத்தனமும், அறியாமையும், முழுவதுமாக அவர்களை விட்டு அகன்றிட;
அவர்கள் சிறைப்பட்டிருக்கும் அடிமைத்தன கூண்டினை உடைத்திட சிங்கம் போலச் சீறிப்பாயும் வலிமை வாய்ந்தது தமிழ்மொழி.
2. "முன்னம் ஒருநாள் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்" யார், யாரைப் பற்றிக் கூறியது?(PTA -5)
தமிழன்னையைப் பற்றிச் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறியது.
3. தமிழ் மொழியின் சிறப்புகளாக நீவீர் அறிவன யாவை?
( PTA - 6)
தமிழ் மொழியின் சிறப்புகள்:
*உழைப்பாளர்களின் உழைப்பைப் பாட தமிழே வேண்டும்.
* சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியரின் சங்கத்தில் இருந்து செம்மொழியாக ஆட்சிசெய்த மொழி.
* பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்த சிறப்புடையவள்.
4. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் எழுதிய கவிதை நூல்களில் சிலவற்றை எழுதுக.
*ஒளிப்பறவை
*சர்ப்பயாகம்
*சூரிய நிழல்
*ஒரு கிராமத்து நதி
*பூஜ்யங்களின் சங்கிலி
5. பழமைநலம் கொண்ட மொழி தமிழ்மொழிஎவ்வாறு?
* தமிழ் மொழி பாண்டிய மன்னர்கள் அமைத்த சங்கத்திலே தன்னிகரற்ற செம்மொழியாய் இருந்து ஆட்சி செய்த மொழியாகும்.
* பாரி போன்ற வள்ளல்கள் பலரை இத்தமிழ் மண்ணிற்குத் தந்த பழமைநலம் கொண்ட மொழியாகும்.
6. கவிஞர் சிற்பி எழுதியுள்ள உரைநடை நூல்கள் யாவை?
* இலக்கிய சிந்தனைகள்
* மலையாளக் கவிதை
* அலையும் சுவடும்
சிறுவினா
1. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் இலக்கியப் பணி குறித்து எழுதுக?
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் இலக்கியப்பணி:
* கவிஞர்,பேராசிரியர்,மொழிபெயர்ப்பாளர்,இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்ரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
* மொழிபெயர்ப்புக்காகவும்' ஒரு கிராமத்து நதி' என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
* இவர் ஒளிப்பறவை,சர்ப்பயாகம், சூரிய நிழல்,ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி, முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; இலக்கிய சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். *மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் மொழிபெயர்த்துள்ளார்; சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.
நெடுவினா
1.தமிழ்மொழி மீண்டும் சீறிவர வேண்டுமென்று கவிஞர் சிற்பி தமிழை அழைக்கும் காரணங்களைத் தொகுத்து எழுதுக
இயற்கையைப் பாட வருக தமிழே!
* மாலை நேரத்தில் சிவந்த கதிர்களைச் சுருக்கிக் கதிரவன் மலைக்குப் பின் சென்று மறைவான்.
* அம்மாலை நேர வானம் கதிரவனின் ஒளிபட்டுச் செந்நிறப்பூக்காடாக் காட்சியளிக்கும்.
* அக்காட்சியைப் பாட தமிழே வா!
தொழிலாளர்களைப் பாட வருக தமிழே!
*தினமும் உழைக்கும் தொழிலாளர்கள் கைகளும் மாலை நேர வானம் போல சிவந்திருக்கும்
* தொழிலாளர்களின் தோள்களில் முத்துமுத்தாய் வியர்வைப் பூத்திருக்கும்.
* இக்காட்சிகளைப் பாட தமிழே நீ வா!
தமிழின் பழமைநலம்:
* பொங்கிவரும் கவிதைக்கு உணவாக விளங்குவது முத்தமிழ் ஆகும்.
* பாண்டியனின் ஆட்சிப் பகுதியான மதுரையில் சங்கம் அமைத்து அரசாட்சி செய்த சிறப்புடையது.
* பாரி போன்ற வள்ளல்களைத் தமிழ்நாட்டுக்குத் தந்த பெருமை உடையது.
சிங்கம் போல சீறி வா:
*பழமைநலம் மீண்டும் பிறக்க மேனி சிலிர்க்க தமிழ்க்குயிலே மீண்டும் கூவி வா!
* குளிர்ச்சியான பொதிகை(குற்றால) மலையில் தோன்றிய தென்னாட்டுத் தமிழே! உன்னைப் புதிப்பிக்க புறப்பட்டு வா!
* தமிழரின் அடிமைத்தனமும், அறியாமையும் அகன்றிடவும், அவர்கள் சிறைப்பட்டிருக்கும் கூண்டினை உடைத்திட சிங்கம் போலச் சீற்றத்தோடு வா!
Comments
Post a Comment