12 ஆம் வகுப்பு, தமிழ்,இயல் 1, இளந்தமிழே, புத்தக வினா விடைகள், பலவுள் தெரிக,குறுவினா,சிறுவினா,நெடுவினா,2 மதிப்பெண்,4 மதிப்பெண்,6மதிப்பெண்,+2தமிழ்,12thதமிழ்,12 th Tamil,+2 Tamil, Eyal 1, Elanththamilzhe,book back questions,2 mark,4mark,6mark, pdf download

          12 ஆம் வகுப்பு


தமிழ்


இயல் 1 


இளந்தமிழே

 சிற்பி பாலசுப்ரமணியம்





 புத்தக வினா விடைகள்


எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி

நாகர்கோவில் - 4

9843448095



பலவுள் தெரிக


1."மீண்டும் அந்த பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்

அ) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்து

ஆ) பொதிகையில் தோன்றியது

இ) வள்ளல்களைத் தந்தது


 i)அ மட்டும் சரி 

ii) அ,ஆ இரண்டும் சரி 

iii) இ)  மட்டும் சரி 

iv) அ,இ இரண்டும் சரி

 

விடை: 

iv) அ,இ இரண்டும் சரி


குறுவினா


1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

 

*செந்நிறத்து வானம் போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள் மீது முத்து முத்தாய் வீற்றிருக்கும். *இந்த அழகினை வியந்து பாட செந்தமிழின் துணை வேண்டும் என கவிஞர் சிற்பி கூறுகின்றார்.


 சிறுவினா


 1."செம்பரிதி மலைமேட்டில் தலையை சாய்ப்பான்

செந்நிறத்துப் பூங்காடாம்  வான மெல்லாம்!" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக


* மாலை நேர சூரியன், மலை முகட்டின் மீது தலையைச் சாய்க்கிறான்.

* சூரியனின் செம்மஞ்சள் நிறம், வானம் முழுவதும் பூக்காடு போலப் பரவிப் படர்ந்துள்ளது.

*  இயற்கை ஓவியன் வரைந்த அழகிய செந்நிறத்துப் பூக்காடாக வானம் தோன்றுவதற்கு மாலை நேரத்து சூரியன் காரணமாக அமைந்துள்ளான் என்பதனை இத்தொடர் அழகாக வெளிப்படுத்துகிறது.

*  அந்தி வானத்தின் சிவந்த நிறமும், அன்றாடம் உழைத்து வாழும் உழைப்பாளிகளின் கைவண்ணமும் ஒன்றே என்பதை கவிஞர் சிற்பியின் இவ்வரிகள் நயமாக காட்சிப்படுத்துகின்றன.



2.  பின்வரும் இருபாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.


 பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே- நன்னூல்


மீண்டு மந்த பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்கத் தமிழ் குயிலே கூவி! வா! வா! - -சிற்பி பாலசுப்பிரமணியம் 


நன்னூல்


1.ஒரு மொழியில், பல்வேறு காலங்களில் தோன்றிய இலக்கியங்களை நோக்கின் பழைய சொல் வழக்குகள் கழிதலும் புதிய சொல் வழக்குகள் புகுதலும் ஆகிய இப்பண்பு இடம் பெற்றிருக்கும்


2.  கால மாற்றத்திற்கு ஏற்ப மொழியில் பழையன கழிதலும் புதியன புகுதலும் போற்றற்குரியன என்கின்றது இப்பாடலடி எனவேபுதியவற்றை ஏற்போம்.


 சிற்பி பாலசுப்பிரமணியம்


1. நாட்டின் வளர்ச்சியில் புதுமையை ஏற்றதனால் தமிழ்நாட்டில் பண்டைய பழக்கவழக்கங்கள், வாழ்வியல் நெறிமுறைகள், மொழி பண்பாடு என எல்லாம் மாறிவிட்டன.


2. புதியவற்றுக்கு வழி விட்டதனால் பழமைநலம் சிதைவுற்று அழிந்துவிட்டது; பழமை தளிர்க்க தமிழ்க்குயிலே நீ மீண்டும் கூவி வர வேண்டும் என்கிறது இப்பாடல் அடி.


 நெடுவினா 


1.தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. 


எனது அருமை செந்தமிழே!

 

       மாலை நேரத்து சிவந்த நிறமுள்ள சூரியன், மலை முகட்டில் தனது தலையைச் சாய்க்கிறான். அப்போது அவனுடைய செம்மஞ்சள் நிற ஒளிபட்டு வானம் பூக்காடு போலக் காட்சியளிக்கிறது. அது போல அன்றாடம் அயராது உழைக்கும் உழைப்பாளர்களின் கரங்கள் சிவந்துள்ளன.

      அத்தகைய தொழிலாளர்களின் பருத்த தோள்கள் மீது வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் அரும்பி உள்ளன. இவற்றையெல்லாம் வியந்து பாடுவதற்கு, உன்னை விடப் பொருத்தமான துணை வேறில்லை.


 முத்தமிழே!


      எமது உள்ளத்தில் மூண்டு எழும் கவிதை வெறிக்கு, நீயே உணவாக இருக்கின்றாய்! முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னர்கள் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் நீயே அரசாட்சி புரிந்தாய்.பாரி முதலான கடையெழு வள்ளல்களை எமக்குத் தந்தாய்.     


       எமது உடல் சிலிர்ப்படையுமாறு மீண்டும் அத்தகைய பழமைச் சிறப்பைப் புதுப்பிப்பதற்காகத் தமிழ்க் குயிலாக நீ கூவ வேண்டும். தென்றல் தவழும் பொதிகை மலையில் தோன்றி வளர்ந்த தமிழே! தடைகள் இருந்தால் தாண்டி, கூண்டை உடைத்து வெளிப்படும் சிங்கம் போல நீ சீறி வரவேண்டும்.

      இவ்வாறாக, தமிழின் சீரிளமைத் திறனை வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.


இலக்கணக் குறிப்பு


செந்தமிழ்

செந்நிறம்   } பண்புத்தொகை

செம்பரிதி

சிவந்து - வினையெச்சம்

வியர்வைவெள்ளம் - உருவகம்

முத்துமுத்தாய் - அடுக்குத் தொடர்


உறுப்பிலக்கணம்


 1.சாய்ப்பான் - சாய்+ப்+ப்+ஆன்  

சாய் - பகுதி

ப் - சந்தி

ப் - எதிர்கால இடைநிலை

ஆன் - படர்க்கை ஆண்பால்   வினைமுற்று விகுதி


2 . விம்முகின்ற - விம்மு+கின்று+அ

விம்மு - பகுதி

கின்று - நிகழ்கால இடைநிலை

அ - பெயரெச்ச விகுதி


3. வியந்து - விய+த்(ந்)+த்+உ

விய - பகுதி

த் - சந்தி, 'த்' 'ந்' ஆனது விகாரம்

த் - இறந்தகால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி


4. இருந்தாய் - இரு+த்(ந்)+த்+ஆய்

இரு -  பகுதி 

த் - சந்தி,'த்', 'ந்' ஆனது விகாரம் 

த் - இறந்தகால இடைநிலை

ஆய் -  ஒருமை வினைமுற்று விகுதி


புணர்ச்சி விதி


1.செம்பரிதி - செம்மை+பரிதி


  விதி:' ஈறு போதல்' - செம்+பரிதி -செம்பரிதி


 2. வானமெல்லாம் - வானம்+ எல்லாம் 


விதி :'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே' -வானமெல்லாம் 


3. உன்னையல்லால்  உன்னை+ அல்லால்


 விதி: 'இ ஈ ஐ வழி யவ்வும்'-  உன்னை+ய்+அல்லால்

விதி : 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'- உன்னையல்லால்


 4. செந்தமிழே- 

செம்மை+ தமிழே  

விதி: 'ஈறு போதல்' - செம்+தமிழே

 விதி :' முன் நின்ற மெய் திரிதல்'-  செந்தமிழே 


இந்த வினா விடைகளை Pdf வடிவில் பெற Click the download button below


Comments

Post a Comment