தன்னம்பிக்கை கவிதைகள் - 2
தோல்வி நல்ல நண்பன்
தோல்வி
வீழ்ச்சியல்ல
வெற்றிக்கான நுழைவாயில்…!
ஊர்ந்து
தவழ்ந்து
காலூன்றி
பாதம் பதிக்க
எத்தனை முறை
தோற்றிருப்பாய்…!
நடைபயில
நீ எடுத்த
முயற்சியில்
பாதியை
உன் பாதையாக்கு
தோல்வி
உனக்கு வழிவிடும்…!
முள்ளின்
தீண்டலைத்
தாங்கிய
கைகளில்தான்
ரோஜா தவழும்…!
தோல்வியை
நண்பனாக்கி பார்
நம்பிக்கை
துளிர்விடும்
வெற்றி உன்
விலாசம் தேடி வரும்…!
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
9843448095
சிறந்த கவிதை, எதார்த்த வரிகள்.
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete