+2 தமிழ்-இயல் 1-இனிக்கும் இலக்கணம்-தமிழாய் எழுதுவோம்-புத்தக வினா விடை-12 ஆம் வகுப்பு-தமிழ்-12 th தமிழ்-+2 Tamil-12 th Tamil-eyal 1-Book back question-qustion answer-Pdf download
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.
12 ஆம் வகுப்பு - இயல் 1
இனிக்கும் இலக்கணம்- தமிழாய் எழுதுவோம்
புத்தக வினா விடை
இலக்கணத் தேர்ச்சிகொள்:
1 . பிழையான தொடரைக் கண்டறிக
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
விடை: இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல ஆடுகின்றன.
விடை:அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.
3. முடிந்தால் தரலாம்,முடித்தால் தரலாம் இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து அமைக்கவும்
முடிந்தால் தரலாம்:
*ஏழைச் சிறுவர்களுக்குக் கல்வி உதவியை அனைவரும் முடிந்தால் தரலாம்.
முடித்தால் தரலாம் :
*செயல்திட்டப் பதிவேடுகளை முடித்தால் தரலாம்
4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
*எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்கப் பழக வேண்டும்.
*ந,ண,ன,/ல,ள,ழ/ற,ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
*தமிழில் மயங்கொலி எழுத்துகள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாதது ஒன்றாகும்.
*எழுதும்போது தொடக்கத்தில் சில காலம் வாய் விட்டோ அல்லது மனதுக்குள் உச்சரித்தபடியோ எழுதப் பழகுவது நல்லது.
*வேகமாக எழுத முயல்வது வழிகோலும். எனவே, நிதானமாக எழுதுவது நல்லது.
*கெ, கே, கொ, கோ போன்ற கொம்புடைய எழுத்துகளின் குறில் நெடில் வேறுபாட்டினைப் புரிந்து எழுத வேண்டும்.
.
@ majs 25/07/2021
Comments
Post a Comment