+1 தமிழ்,இயல் -1,இலக்கணம்,மொழிமுதல் இறுதி எழுத்துகள்,புத்தக வினா விடைகள்,34 சிறப்புப் பலவுள் தெரிக,34 ஒரு மதிப்பெண் வினாக்கள்,விளக்கமான காணொலி,11ஆம் வகுப்பு,11 th தமிழ்,+1Tamil,Eyal -1,illakkanam,Mozhi muthal irruthi eazhthugal,Book Back Questions,special one word,34 One mark question,Pdf download,Explanati0n Video,TET,TRP,TNPSE ,GROUP EXAM,GOVERMENT EXAM,அரசுப் பொதுத்தேர்வு,
11ஆம் வகுப்பு
தமிழ்
இயல் -1
இலக்கணம்
மொழிமுதல் இறுதி எழுத்துகள்
புத்தக வினா விடைகள்
34 பலவுள் தெரிக ,34 ஒரு மதிப்பெண் வினா விடைகள்,
விளக்கமான காணொலி
+1Tamil,Eyal -1,illakkanam,
Mozhi muthal irruthi eazhthugal,
Book Back Questions,
34 One Word Questions,
Pdf Download & Explanation viedo,
TET,TRP,TNPSE ,GROUP EXAM,GOVERMENT EXAM,அரசுப் பொதுத்தேர்வு
புத்தக வினா விடைகள் காண 👇👇👇👇
இலக்கணத் தேர்ச்சிகொள் (புத்தகம் பக்கம் எண் -20)
1 . தவறான இணையைத் தேர்வு செய்க. (மார்ச்.20)
அ) மொழி+ ஆளுமை - உயிர்+ உயிர்
ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
இ) கடல் + அலை - உயிர்+ மெய்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
விடை : இ) கடல் அலை - உயிர் + மெய்]
2. கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப் பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக:
அ) சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3) அண்ணா
ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10)
கல்யாணசுந்தரனார்
இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் (6)
பாரதிதாசன்
ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர் (2)
ஜீவா
3. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
அ). காலங்காத்தால் எந்திரிச்சி படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்.
அதிகாலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேற்ற பலன் வராம போவாது.
முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.
இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும். காலத்துக்கேற்றாற் போல புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்.
ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாப் பதிய வைக்கனும்.
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கவனமாகப் பதிய வைக்க வேண்டும்.
உ) தேர்வெழுத வேகமாகப் போங்க, நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும். தேர்வெழுத விரைவாகச் செல்லுங்கள். நேரம் கழித்துச் சென்றால் பதற்றமாகிவிடும்.
4 . வினாக்கள்
அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
# மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் - 22
அவை: உயிர் எழுத்துகள் 12 (அ முதல் ஔ வரை)
# மெய் எழுத்துகள் - 10 (க, ங, ச, ஞ, த, ந,ப, ம, ய,வ)
ஆ ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்துக்காட்டுத் தருக
# மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்:24
# உயிர் எழுத்துகள் - 12 (அமுதல் ஔ வரை)
# மெய் எழுத்துகள் - 11 (ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் )
# குற்றியலுகரம் - 1 (நநுந்தை)
இவையே மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகளாகும்.
எ.கா :
நாடு - உயிரீறு
தமிழ் - மெய்யீறு
வீடு - குற்றியலுகர ஈறு
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.
இ) உயிரீறு மெய்யீறு - விளக்குக ( அரசுப் பொதுத்தேர்வு மார்ச்.20)
உயிரீறு:
நிலை மொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக நின்றால் அதனை உயிரீறு என்பர்.
எ. கா:
மணிமாலை - மணி+ மாலை (மணி- நிலைமொழி) (ணி- இறுதி எழுத்து - ண் +இ)
மெய்யீறு:
நிலை மொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக நின்றால் அதனை மெய்யீறு என்பர்.
எ. கா:
பொன்வண்டு- பொன் +வண்டு-(பொன்- நிலை மொழி) (ன்- இறுதி எழுத்து)
ஈ) உயிர்முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க
உயிர்முதல்
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருப்பின் அஃது உயிர் முதல் எனப்படும்.
எ.கா :
வாழையிலை - வாழை + இலை (இலை- வருமொழி) (இ- உயிர் எழுத்தாகும் எனவே, இஃது உயிர்முதல் ஆகும் )
மெய்ம்முதல்:
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருப்பின் அஃது மெய் முதல் எனப்படும்.
எ.கா :
தமிழ்நிலம்- தமிழ் + நிலம் (நிலம் -வருமொழி) (நி= (ந்+இ) ‘ந்’ -என்பது மெய் எழுத்தாகும் .எனவே,இது மெய்ம்முதல் ஆகும்.)
உ )குரங்குக்குட்டி- புணர்ச்சியை விளக்குக.
குரங்குக்குட்டி- குரங்கு + குட்டி
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் கசதப மிகும்”
குரங்குக்குட்டி
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.
எ ) உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் இச்சொற்களில் எவ்வகையான ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
# உயிரெழுத்து (த் +உ) = உயிரீறு
# பன்னிரண்டு (ட் + உ) = உயிரீறு
# திருக்குறள் (ள்) = மெய்யீறு
# நாலடியார் (ர்) = மெய்யீறு
ஏ) மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
மொழி முதல் எழுத்துகள் : 22
அவை,
உயிரெழுத்துகள் - 12
எ.கா :
அ -அம்மா, ஆ- ஆடு,இ -இலை, ஈ - ஈச்சமரம், உ - உயிர், ஊ - ஊதல், எ - எலி,
ஏ -ஏணி, ஐ- ஐவர் ,.ஓ-ஒன்று ,, ஓ - ஓடம், ஔ - ஒளவை.
2) மெய்யெழுத்துகள் - 10
எ.கா :
க - கப்பல்,ங - ஙனம், ச - சங்கு, ஞ - ஞாலம், த - தமிழ், ந - நன்றி, ப - பகலவன்,
ம - மழை , ய - யவனம் , .வ- வளம்
மொழி இறுதி எழுத்துகள் : 24
அவை,
1) உயிரெழுத்துகள் - 12
எ.கா :
சில - அ, பலா - ஆ, கல்வி- இ, தேனீ - ஈ, உலகு - உ, பூ - ஊ,எ - ஏ - ஒரே, அலை - ஐ, நொ -ஒ.போ - ஓ. கௌ -ஒள
2) மெய்யெழுத்துகள் - 11
எ.கா :
உரிஞ் - ஞ், மண் -ண், வெரிந் -ந் , பழம் -ம், அறன் -ன் , மெய் -ய் , அவர் -ர் ,
அவல் -ல் ,அவ் -வ், தமிழ் -ழ், அவள் -ள்
(குறிப்பு : ஞ,ந், வ் - பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதியில் வந்துள்ளன.)
3) குற்றியலுகரம் - 1
எ.கா :
பாக்கு -கு , பஞ்சு -சு, எட்டு -டு, பந்து -து, சால்பு -பு , கயிறு - று,
Kurusady m.a.jelestin 9843448095
புத்தக வினா விடைகள் Pdf Download
Clik The Download Button Below 👇👇👇👇
34 ஒரு மதிப்பெண் வினா விடைகள் காண 👇👇👇👇
பலவுள் தெரிக
1 . மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
அ) 12
ஆ) 18
இ) 24
ஈ) 22
விடை : ஈ) 22
2 . மொழி இறுதியில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
அ) 12
ஆ) 18
இ) 24
ஈ) 22
விடை : இ) 24
3 . மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையாதைக் கண்டுபிடிக்க
அ) அன்னம்,கிண்ணம்
ஆ) டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய் , இலட்சாதிபதி
ஈ) றெக்கை, அங்ஙனம்
விடை : அ) அன்னம்,கிண்ணம்
4 . மொழி முதலில் வரும் மெய் எழுத்துக்கள்
அ) க் ச் ட் த் ப் ற்
ஆ) ங் ஞ் ண் ந் ம் ன்
இ) ய் ர் ல் வ் ழ் ள்
ஈ) க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ்
விடை : ஈ) க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ்
5. மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துக்கள்
அ) ய் ர் ல் வ் ழ் ள்
ஆ) க் ச் ட் த் ப் ற்
இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
ஈ) க் ச் த் ந் ப் ம் ய் ஞ் ங்
விடை : இ) ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.
6 . தவறான இணையைத் தெரிவு செய்க
அ) கயல் + விழி - பெயர் + பெயர்
ஆ) தமிழ் + கற்றார் - பெயர் + வினை
இ) வந்தாள் + மகாலட்சுமி - வினை + வினை
ஈ) தொழுதனர் + மக்கள் - வினை + பெயர்
விடை : இ) வந்தாள் + மகாலட்சுமி - வினை + வினை
7 . தவறான இணையைத் தெரிவு செய்க
அ) மொழி+ ஆளுமை - உயிர் + உயிர்
ஆ) கடல் + அலை - உயிர் + மெய்
இ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
விடை : ஆ) கடல் + அலை - உயிர் + மெய்
8) பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக
அ) காலங்காத்தால எந்திரிச்சு படிச்ச ஒரு தெளிவு கெடைக்கும்.
அதிகாலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்.
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பயன் வராம போவாது.
முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.
இ) காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழிவடிவத்த மாத்தனும்.
காலத்துக்கேற்றாற் போல புதிது புதிதாக மொழி வடிவத்தை
மாற்ற வேண்டும்.
ஈ) “ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும்
கவனமா பதிய வைக்கனும்.”
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது
எல்லாவற்றையும் கவனமாகப் பதிய வைக்க வேண்டும்.
உ) “தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்.”
தேர்வெழுத விரைவாகச் செல்லுங்கள். நேரம் கழித்துச்
சென்றால் பதற்றமாகிவிடும்.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
9 . இன்றைய வழக்கில் வராத அக்கால வழக்கில் இடம்பெற்ற இறுதி எழுத்துகள் யாவை ?
அ) ம் , ன், ய்
ஆ) வ், ழ், ள்
இ) ஞ் , ந் , வ்
ஈ) ஞ் , ண், ந்
விடை : இ) ஞ் , ந் , வ்
10 . இலக்கண வகையால் சொல் எத்தனை வகைப்படும்
அ) 3
ஆ) 6
இ) 2
ஈ) 4
விடை : ஈ ) 4
11 . சொல்லின் முதலில் வரும் குற்றியலுகரத்திற்கான சான்று எது?
அ) நெஞ்சு
ஆ) நெடு
இ) நேற்று
ஈ) நுந்தை
விடை : ஈ) நுந்தை
12 . பின்வரும் சொற்களில் எது தமிழ்ச் சொல்லாகும் ?
அ) றெக்கை
ஆ) டப்பா
இ) கோதை
ஈ) ராக்கி
விடை : இ) கோதை
13 . ' ஙனம்' என்னும் சொல் தரும் பொருள் யாது ?
அ) மன்றம்
ஆ) மக்கள்
இ) விவாதம்
ஈ) விதம்
விடை : ஈ) விதம்
14 . மொழி இறுதியில் வரும் தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
அ) 12
ஆ) 24
இ) 18
ஈ) 22
விடை : 22
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
15 .தவறான இணையைத் தெரிவு செய்க
அ) இயல் + விழி - பெயர் + பெயர்
ஆ) தமிழ் + கற்றார் - பெயர் + வினை
இ) படித்தான் + குமரன் - வினை + வினை
ஈ) வந்தான் + குமரன் - வினை + பெயர்
விடை : இ) படித்தான் + குமரன் - வினை + வினை
16 . சொற்கள் எதனால் ஆனவை ?
சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை.
17. மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை ?
மொழி முதல் எழுத்துக்கள் -22
18. கீழ்க்காண்பவற்றுள் சுட்டெழுத்துகள் எவை?
அ) அ, இ , உ
ஆ) யா , இ
இ ) ஒ , ஐ, அ
ஈ ) ஆ, இ , உ
விடை : அ) அ, இ , உ
19 . கீழ்க்காண்பவற்றுள் வினா எழுத்துகள் எவை?
அ) அ, இ , உ
ஆ) எ , யா , ஆ , ஒ , ஏ
இ) ஐ , இ , யா
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ) எ , யா , ஆ , ஒ , ஏ
20 . உயிரீறு எடுத்துக்காட்டு ஒன்று தருக.
மணிமாலை - மணி+ மாலை (மணி- நிலைமொழி
(ணி- இறுதி எழுத்து - ண் +இ)
21 .மெய்யீறு எடுத்துக்காட்டு ஒன்று தருக.
பொன்வண்டு- பொன் +வண்டு-(பொன்- நிலை மொழி)
(ன்- இறுதி எழுத்து)
22.உயிர்முதல் எழுத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
வாழையிலை - வாழை + இலை (இலை- வருமொழி) (இ- உயிர் எழுத்தாகும் எனவே, இஃது உயிர்முதல் ஆகும் )
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
23 . மெய்ம்முதல் எழுத்துக்கு ஒர் எடுத்துக்காட்டுத் தருக.
தமிழ்நிலம்- தமிழ் + நிலம் (நிலம் -வருமொழி) (நி= (ந்+இ)
‘ந்’ -என்பது மெய் எழுத்தாகும் .எனவே,இது மெய்ம்முதல் ஆகும்.)
24. சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாலும், வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துகள் சந்திக்கும் முறையை எத்தனை விதமாகப் பிரிக்கலாம்
அ) 5
ஆ) 6
இ) 4
ஈ) 7
விடை : இ) 4
25 . இலக்கண வகையால் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
இலக்கண வகையால் சொற்கள் 4 வகைப்படும்
அவை,
பெயர்ச்சொல், வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல்
26 . கீழ்க்காண்பவற்றுள் பெயரையும் , வினையையும் சார்ந்து வரும் சொற்கள் எவை ?
அ) இடைச்சொல், பெயர்ச்சொல்
ஆ) பெயர்ச்சொல், உரிச்சொல்
இ) உரிச்சொல், வினைச்சொல்
ஈ) இடைச்சொல், உரிச்சொல்
விடை : ஈ) இடைச்சொல், உரிச்சொல்
27 . குற்றியலுகரத்தின் வகைகள் எத்தனை?
அ) 4
ஆ) 3
இ) 6
ஈ) 5
விடை : இ ) 6
28 . கீழ்க்காண்பவற்றுள் எது மென்தொடர்க் குற்றியலுகரம் ?
அ) மார்பு
ஆ) பஞ்சு
இ) வீடு
ஈ) அச்சு
விடை : ஆ) பஞ்சு
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
29. கீழ்க்காணும் சொல்லில் தற்போது தமிழகத்தில் வழக்கில் இல்லாத சொல்
அ) அங்ஙனம்
ஆ) உங்ஙனம்
இ) இங்ஙனம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ ) உங்ஙனம்
30 . மெய்யீறு என்றால் என்ன ?.
மெய்யீறு:
நிலை மொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக நின்றால் அதனை மெய்யீறு என்பர்.
31 .நடந்து + செல் - இதில் இடம் பெற்றுள்ள நிலைமொழி, வருமொழி
எவை ?
அ) பெயர் + பெயர்
ஆ) பெயர் + வினை
இ) வினை + வினை
ஈ) வினை + பெயர்
விடை : இ) வினை + வினை
32 . வளவன் + படித்தான்
இதில் நிலைமொழி எது ?
அ) படித்தான்
ஆ) வளவன்
இ) படி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ) வளவன்
33 . நாட்டுப்பண் - பிரித்து எழுதுக
அ) நாட்டு + பண்
ஆ) நாடு + பண்
இ) நாட்டுப் + பண்
ஈ) நாட்டு + ப் + பண்
விடை : ஆ) நாடு + பண்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
34 . சார்பெழுத்துகளில் சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராத எழுத்து எது?
அ) உயிர்மெய்
ஆ) குற்றியலிகரம்
இ) ஔகாரக் குறுக்கம்
ஈ) ஆய்தம்
விடை : ஈ) ஆய்தம்
34 ஒரு மதிப்பெண் வினா விடைகள் Pdf Download
Clik The Download Button Below 👇👇👇👇
விளக்கமான காணொலி காண
Clik The YOUTUBE Button Below 👇👇👇👇
Comments
Post a Comment